திருகோணமலை (Trincomalee) நிறுத்தி வைக்கப்பட்ட நெல் ஏற்றும் சிறிய ரக கெண்டருடன் சீமெந்து ஏற்றும் பார
ஊர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை 12.30 மணியளவில் ஈச்சிலம்பற்று காவல் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றுவதற்காக வந்த பார
ஊர்தியானது ஈச்சிலம்பற்று -பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வீதியில் நெல் ஏற்ற
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ஹெண்டர் வாகனத்தில் நேருக்குநேர்
மோதியுள்ளது.
ஆபத்துக்கள்
இந்த நேரத்தில் நெல் ஏற்றும் வாகனத்தில் யாரும் இல்லாததால்
எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து பார ஊர்தி வாகனச் சாரதியின் தூக்க களக்கமே இவ் விபத்துக்கான காரணமென
ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா
https://www.youtube.com/embed/dEd6SAd5RZY
