Home இலங்கை சமூகம் வவுனியாவில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

வவுனியாவில் கோர விபத்து : ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

0

வவுனியா (Vavuniya) குருக்கள் புதுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி மீன் ஏற்றி வந்த வாகனத்தோடு வவுனியாவிலிருந்து குருக்கல் புதுக்குளம் நோக்கி வேலையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரே விபத்தில் சிக்கி உள்ளனர்.

வவுனியா வைத்தியசாலை

இதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் ஸ்தலத்தில் பலியானதோடு மற்றயவர் வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணித்தவர் யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையை பரமநாத் சிவாகரன் (Paramanath Sivakaran) (வயது 30) எனவும் காயமடைந்தவர் செல்லத்துரை கிருஷ்ணபாலன் (Chelathurai Krishnapalan) (வயது 37) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூவரசங்குளம் காவல்துறையினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version