Home இலங்கை சமூகம் வவுனியாவில் கோர விபத்து : பரிதாபமாக இருவர் பலி

வவுனியாவில் கோர விபத்து : பரிதாபமாக இருவர் பலி

0

வவுனியா (Vavuniya) ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி
மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவர் ஓமந்தை எரிபொருள்
நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்ற
ஒருவருடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா வைத்தியசாலை

இதையடுத்து, விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் வீதியில் சென்றவர்களால் மீட்கப்பட்டு
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் ஏற்கனவே
மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய சங்கீதன் என்பவரும் மற்றும்
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய யோகராசா என்பவருமே உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/accident-in-vavuniya-today-1726666383

NO COMMENTS

Exit mobile version