Home இலங்கை சமூகம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் : சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் நடக்கும் முறைகேடுகள் : சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள்

0

Courtesy: uky(ஊகி)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தில் பல முறைகேடுகள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நீண்ட நாட்களாக தொடரும் இந்த முறைகேடுகள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

நிதி மற்றும் நிர்வாகத்தில் நிகழ்ந்து வரும் இந்த முறைகேடுகள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் போது குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையினை புரிந்து கொள்ள முடியும்.

வாகன பாதுகாப்பு நிலையம் 

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினால் நிரந்தர மற்றும் பாதுகாப்பான வாகனப் பாதுகாப்பு நிலையம் 15.03.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இதில் இருந்து வரும் வருமானத்தில் 10 சதவீத வருமானம் மாகாணத் திறைசேரிக்குச் செலுத்த வேண்டும்.மீதி 90 சதவீத வருமானம் நோயாளர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும் இதிலிருந்து பெறப்படும் வருமானம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுகின்றது.

அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான விசேட வைத்திய நிலையம் திறப்பு விழாவின் போது 45000 ரூபா மேளதாளத்துக்கும் 200,000 ரூபா வேறு ஒரு தேவைக்கும் என கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணையை ஆரம்பமாகக் கொண்டு முறைகேடுகளை ஆராய்ந்து கண்டுபிடித்தால் அதன் பின் நடந்துகொண்டிருக்கும் முறைகேடுகளும் வெளியில் வரும் என அவர்கள் தொடர்ந்து தெரிவித்திருந்தனர்.

தொடரும் முறைகேடுகள்

வடக்கில் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களினுள் நடைபெறும் முறைகேடுகள், ஊழல் மோசடிகள் தொடர்பில் வலுவான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்துள்ள போதும் அவற்றைத் தடுத்து விடுவதற்கான எத்தகைய பொருத்தப்பாடான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பல குற்றச் சாட்டுக்கள் உரிய விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் பால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் உயரதிகாரிகளுக்கு விசாரணைக் குழுவினால் முன்மொழிவுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆயினும் அவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டு விடுவதாக கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் பொதுமக்களின் நலன்களைப் பேணுவதில் அக்கறையுடன் செயற்படும் சமூக ஆர்வலர்களை மனவுழைச்சலுக்குள்ளாக்கி விடுவதை அவதானிக்க முடிகின்றது.

ஈழத்தமிழர்களுக்கு இத்தகைய தோற்றப்பாடுகள்; எதிர்காலத்தில் பொருத்தமற்ற விளைவுகளை தந்து விடும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version