Home இலங்கை சமூகம் குரங்கால் இடம்பெற்ற விபத்து! ஒருவர் உயிரிழப்பு

குரங்கால் இடம்பெற்ற விபத்து! ஒருவர் உயிரிழப்பு

0

புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம்
குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (24.02.2025) இடம்பெற்றுள்ளது.

 சம்பவம் குறித்து மேலும்
தெரியவருவதாவது,

புதுக்குடியிருப்பு பகுதி

”புதுக்குடியிருப்பு பகுதியில் மரணச்சடங்கு ஒன்றில் கலந்துவிட்டு வீடு
திரும்பிய வேளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மோட்டார்
சைக்கிளில் கணவர், மனைவி, 6 மாத குழந்தையுடன் பயணித்து கொண்டிருந்த வேளை
குரங்கு ஒன்று குறுக்கே மோதியதியுள்ளது.

தாய் தலையில் அடிபட்டதனால்
புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை
பலனின்றி தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான
அகிலன் தனுஷியா என்ற 35 வயதான இளம் குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார். 

NO COMMENTS

Exit mobile version