Home இலங்கை சமூகம் மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து : மூவர் படுகாயம்

மன்னார் உயிலங்குளம் வீதியில் கோர விபத்து : மூவர் படுகாயம்

0

மன்னார் (Mannar) உயிலங்குளம் பகுதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (27) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கோர விபத்து

விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் பட்டா வாகனத்தில் பயணித்தவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மற்றும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

படுகாயமடைந்த நபர்களை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/accident-on-mannar-uilangulam-road-1724776402

NO COMMENTS

Exit mobile version