Home ஏனையவை வாழ்க்கைமுறை பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகள் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகள் கொள்வனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

கடுமையான பக்டீரியா தொற்றுக்கான தடுப்பூசிகளை பாக்கிஸ்தானிய நிறுவனமொன்றிடம் இருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடுமையான பக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 1 கிராம் மெராபனம் தடுப்பூசி குப்பிகளே இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

இதன்படி, 900,000 குப்பிகளை கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விலைப்புள்ளிகள் 

இது தொடர்பான கேள்வி கோரலின் போது பாகிஸ்தானின் m/s ஜெனிக்ஸ் பார்மா (பிரைவேட்) லிமிடெட் குறைந்த விலைப்புள்ளிகளை சமர்ப்பித்திருந்தது.

அதன் பிரகாரம், குறித்த நிறுவனம் மேற்படி கொள்முதலை வழங்குவதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 1 கிராம் மெராபனம் தடுப்பூசியின் 900,000 குப்பிகளை மேற்படி நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version