Home இலங்கை சமூகம் பேருந்துகளில் டிக்கெட் பெறாத பயணிகளுக்கும் இனி சிக்கல்! இன்று முதல் அபராதம்

பேருந்துகளில் டிக்கெட் பெறாத பயணிகளுக்கும் இனி சிக்கல்! இன்று முதல் அபராதம்

0

மேற்கு மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் மற்றும் டிக்கெட் பெறாத பயணிகள் மீது இன்று (16) முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ளது.

அதன்படி, இந்த சட்டத்தை மீறும் நடத்துனர்களுக்கு 3 நாள் இடைநீக்கம் மற்றும் அபராதம் விதிக்கவும், டிக்கெட்டுகளை தங்கள் வசம் வைத்திருக்காத பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை

மேற்கு மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது கடந்த மாதம் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டது, அதன்காரணமாக கடந்த 14 நாட்களில், பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில், டிக்கெட் இல்லாத பயணிகளுக்கும் டிக்கெட் வழங்காத நடத்துனர்களுக்கும் மட்டுமே எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன.

இருப்பினும், சட்டத்தை மீறும் பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version