கிளிநொச்சி(Kilinochchi) முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி
மாவட்ட நீதிமன்றினால்
50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த குளிர்பான நிலையம் மீது கடந்த
வாரம் திடீர் பரிசோதனை ஒன்று கிளிநொச்சி மாவட்ட சுகாதார பரிசோதகர்களால்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது குளிர்பான நிலையம்
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டு குறித்த குளிர்பான
விற்பனை நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு தாக்கல்
குளிர்பானம் தயாரிக்கும் பகுதியில் சுவர், தரை அழுக்காக
காணப்பட்டமை,
உணவு ஈக்களால் மாசடையும் வகையில் திறந்த நிலையில் விற்பனை செய்தமை, உடல்நலத்தகுதியை
உறுதிப்படுத்தும் மருத்துவச்சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை ஆகிய
10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குளிர்பான நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றையதினம் (20) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு
குளிர்பான நிலைய உரிமையாளருக்கு ரூபா 50,000 தண்டப் பணம் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
