Home இலங்கை சமூகம் யாழில் இயங்கிய சில உணவகங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழில் இயங்கிய சில உணவகங்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

யாழ் மாநகரசபைக்குட்பட்ட யாழ் நகர் 2 பகுதியிலுள்ள சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட யாழ் நகர் 2 பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவில்
தி. கிருபன், கு . பத்மகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால்
கடந்த 26.06.2024ம் திகதி உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது பொது சுகாதார பரிசோதகர் வழங்கிய அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் இனங்காணப்பட்டது.

குறித்த உணவகத்திற்கு எதிராக மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர் கு .
பத்மகுமாரினால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் 01.07.2024ம்
திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட கௌரவ நீதவான் s.
லெனின்குமார் குறித்த உணவகத்தின் நிலையத்தின் உரிமையாளர் குற்றத்தை ஒப்பு
கொண்டதிற்கு இனங்க ரூபா 90000/= தண்டபணம் அறவிட்டதுடன் அனைத்து குறைபாடுகள்
நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார
பரிசோதகர்களிற்கு கட்டளை வழங்கினார்.

இதனையடுத்து மாநகர பொது சுகாதார
பரிசோதகர்களால் குறித்த உணவகம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/action-taken-against-unsanitary-restaurants-1719867021

NO COMMENTS

Exit mobile version