கிளிநொச்சியில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால்
வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பூர்த்தியாக்கும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக
மற்றும் பிரதியமைச்சர் டி. பி. சரத் ஆகியோர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர்.
சந்தித்த பின்பு ஊடகவியலாளரிடம் கேள்விக்கு பதிலளிக்கும் போது
குறித்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் விநியோகம்
கிளிநொச்சி மாவட்டத்தின் மீள்குடியேற்றத்திற்கு
ஒதுக்கப்பட்ட நிதியின் முன்னேற்றம், அறிவியல் நகர் நகர அபிவிருத்தி,
மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட விடயங்களை மாவட்ட அரசாங்க அதிபரிடம்
கேட்டறிந்து கொண்டார்.
குறித்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட
அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
