Home இலங்கை சமூகம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க நடவடிக்கை

0

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் நன்னடத்தையை கருத்திற் கொண்டு அவர்களின் தண்டனைக் காலத்தை குறைப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
சட்டத்தரணி ஹர்சண நாணயக்கார இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

அதன் பிரகாரம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் ஒவ்வொரு நான்கு வருடத்துக்கும் ஒரு தடவை மீள்பரிசீலனை மேற்கொள்ளப்படும்.

தண்டனைக் காலத்தை குறைப்பதற்கான பரிந்துரை

அதன் போது கைதிகளின் நன்னடத்தை, அவர்கள் புனர்வாழ்வு பெற்றுள்ள காலம் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு கைதிகளின் தண்டனைக் காலத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்படும்.

இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளை மீளவும் செயற்படுத்துவது தொடர்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இந்நாட்களில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version