Home முக்கியச் செய்திகள் அதிகரிக்கும் விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

அதிகரிக்கும் விபத்துகள் : காவல்துறைக்கு பறந்த உத்தரவு

0

விபத்துகள் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, நீண்ட தூர பேருந்து சேவைகளில், இரவு நேரங்களில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் கவனக்குறைவாகவும் ஆபத்தானதாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீண்ட தூர பேருந்துகளை பரிசோதிக்க திட்டம்

நீண்ட தூர பேருந்துகளை ஆய்வு செய்வதற்காக இரவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பொருத்தமான இடங்களில் அதிகாரிகள் குழுக்களை நிறுத்தி , பேருந்துகளை ஆய்வு செய்யவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவு

அத்துடன், காவல்துறை மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு அதிகாரிகள் மூலம் வீதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தும் பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version