தர்மேந்திரா
இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியவர் தர்மேந்திரா. இவருக்கு தற்போது 89 வயது ஆகிறது.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை மோசமாக இருப்பதால், மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.
ஆனால், இந்த தகவலை தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் பிரதிநிதி மறுத்துள்ளார்.
துப்பாக்கி படத்தில் பணியாற்றிய மறைந்த நடிகர் அபிநய்.. இது தெரியுமா
உடல் நிலை எப்படி உள்ளது
அவர் கூறுகையில், “நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்த அடுத்தகட்ட தகவல் கிடைக்கும்போது பகிரப்படும். அவர் விரைவாக குணமடைய அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை” என கூறினார்.
ஷோலே, அப்னே, தர்மன் வீர், தோஸ்த் போன்ற பல படங்களில் தர்மேந்திரா நடித்துள்ளார். இதில் ஷோலே உலக புகழ்பெற்ற திரைப்படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
