Home சினிமா விஜய் சேதுபதி புத்திசாலித்தனம் இல்லாதவரா?.. பதிலடி கொடுத்த பிரபல நடிகர்

விஜய் சேதுபதி புத்திசாலித்தனம் இல்லாதவரா?.. பதிலடி கொடுத்த பிரபல நடிகர்

0

விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தது.

நடிப்பை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கி வந்தார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் விஜய் சேதுபதி தற்போது கூட்டணி சேர்ந்திருப்பதாக அறிவிப்பு இணையத்தில் வெளியாக அப்போது நெட்டிசன் ஒருவர் சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை.

65 நாட்கள்.. தக் லைஃப் படம் குறித்து அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்ட படக்குழு

மகாராஜா படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குநர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று கமெண்ட் செய்துள்ளார்.

பதிலடி

தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நடிகர் சாந்தனு அவருடைய ட்விட்டர் தளத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு, “பிறர் குறித்து இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பூரி ஜெகநாத் ஒரு பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், அவரை இது போன்று பேசுவது மிகவும் தவறு. மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.    

NO COMMENTS

Exit mobile version