Home சினிமா விஜய் சேதுபதி அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா

விஜய் சேதுபதி அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா

0

விஜய் சேதுபதி 

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக முன்னணி இடத்தை பிடித்து வலம் வருபவர் விஜய் சேதுபதி.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சூரி மஞ்சு வாரியர், ராஜிவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் சிந்து பைரவி… புரொமோ இதோ

இதனிடையே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதி நன்கு தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ் அப்டேட்

அதாவது, விஜய் சேதுபதி அடுத்து ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை நயன்தாராவின் Rowdy Pictures நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது இது குறித்த பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version