தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தளபதி விஜய் சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். இதனால் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
திருமணம் செய்யப்போகும் சாய் தன்ஷிகாவிற்கும் விஷாலுக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் படம் வெளிவரவுள்ளது.
விஜய்யின் குடும்ப புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் புகைப்படங்கள் அல்லது அன்ஸீன் வீடியோக்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதா, மகள் திவ்யா மற்றும் மகன் சஞ்சய் உடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
