ஐஸ்வர்யா ராய்
தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை உலக அழகி என்றால் அது எப்போதுமே ஐஸ்வர்யா ராய் தான், 1997ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார்.
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போனற் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.
தமிழ், இந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழி படங்களில் நடித்துள்ள இவர் நிறைய விருதுகளை அள்ளிக்குவித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும்.. தக் லைஃப் படம் குறித்து மனம் திறந்த த்ரிஷா
வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் புடவையுடன் குங்குமம் வைத்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் விதவிதமான ஆடைகளில் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய், இந்த முறை பனாரஸ் புடவையில் நெற்றியில் குங்கும திலகமிட்டபடி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
