Home சினிமா கேம் சேஞ்சர் படத்தால் அந்த நினைவு வந்து விட்டது.. அஞ்சலி வேதனை

கேம் சேஞ்சர் படத்தால் அந்த நினைவு வந்து விட்டது.. அஞ்சலி வேதனை

0

அஞ்சலி

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

அஞ்சலி வேதனை  

இந்நிலையில், கேம் சேஞ்சர் படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார். அதில், ” கேம் சேஞ்சர்’ படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி.

அனிருத் இதை செய்ய வேண்டும்.. ஏ.ஆர்.ரகுமான் கேட்ட அந்த விஷயம் என்ன தெரியுமா?

ஷங்கர் என்னிடம் கதை சொல்லும் போது, அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைச் சொன்னதும் எனக்கு என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. ஏன்னென்றால் என் அம்மாவின் பெயரும் பார்வதி தான்.

இப்படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது. இப்படத்திற்காக என்னிடமிருந்து பெரும் முயற்சி தேவைப்பட்டது. அதனை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன் என்று நம்புகிறேன். கேம் சேஞ்சர் என் கெரியரில் ஒரு சிறந்த படம்” என்று கூறியுள்ளார்.        

NO COMMENTS

Exit mobile version