Home சினிமா கமல்ஹாசன் 237-வது படத்தில் இணையும் முக்கிய நடிகை.. சம்பவம் லோடிங்

கமல்ஹாசன் 237-வது படத்தில் இணையும் முக்கிய நடிகை.. சம்பவம் லோடிங்

0

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து, கடைசியாக இவர் நடிப்பில் தக் லைப் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், இப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதை தொடர்ந்து, பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்து தனது 237-வது படத்தில் நடிக்க உள்ளார்.

பான் இந்திய ஸ்டண்ட் மாஸ்டர்களாக வலம் வருபவர்கள் அன்பு – அறிவு. இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் உள்ளடக்கி இருக்குமாம்.

இன்னும் இரண்டு மாதங்கள் தான்.. நடிகர் விஷால் உடைத்த ஹேப்பி நியூஸ்

முக்கிய நடிகை

இந்நிலையில், இப்படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். மேலும், இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version