Home சினிமா உடல் அமைப்பு பற்றி தப்பான கமெண்ட்!! பதிலடி கொடுத்த நமிதா..

உடல் அமைப்பு பற்றி தப்பான கமெண்ட்!! பதிலடி கொடுத்த நமிதா..

0

நமிதா

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை நமிதா.

இவர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சினிமாவில் விலகி இருக்கும் நடிகை நமிதா, தற்போது அதிகமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.

பதிலடி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை நமிதா, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.

அதில் அவர், எனது உடல் மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு தெரியாது. அது பற்றி அவர்களிடம் சொன்னால் கூட அது சாதாரண விஷயம்தானே என்றார்கள். இந்த விஷயம் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர். அந்த விஷயம் எனக்கு ரொம்ப பாதித்தது. வருத்தமடைந்தேன். அதனால் நான் 25 கிலோ எடை வரை குறைத்தேன்.

இப்போது எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள். தவறாக பேசும் நபர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று என்னிடம் கணவர் கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று தெரிவித்ததாக நமிதா கூறியுள்ளார்.  

Source: https://cineulagam.com/article/actress-namitha-reply-bodyshaming-1718278588

NO COMMENTS

Exit mobile version