Home இந்தியா மகனுக்காக இணைய வழி மூலம் ஐஸ்கிரீம் வாங்கிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

மகனுக்காக இணைய வழி மூலம் ஐஸ்கிரீம் வாங்கிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

0

இந்தியாவில் (India) பெண் ஒருவர் தன்னுடைய மகனுக்காக வாங்கிய ஐஸ்கிரீமில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்திரபிரதேசத்தின் (Uttar Pradesh) நொய்டாவை சேர்ந்த தீபா தேவி என்பவர் நிகிழ்நிலையில் (online) மூலம் வாங்கிய ஐஸ்கிரீமிலேயே பூரான் இருந்துள்ளது.

குறித்த பெண் தன்னுடைய 5 வயது மகனுக்காக அமுல் வெண்ணிலா மேஜிக் ஐஸ்கிரீமை முன்பதிவு செய்துள்ளார்.

ஐஸ்கிரீமில் பூரான்

இதனையடுத்து ஐஸ்கிரீம் வந்தவுடன் திறந்து பார்த்ததும் அதில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்தநிலையில், உடனடியாக ஐஸ்கிரீம் நிறுவனத்திடம் முறைப்பாடு அளிக்கும் போது அவர்கள் ஐஸ்கிரீமுக்கான தொகையை திரும்ப அளித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அமுல் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/puran-in-ice-cream-ordered-online-in-uttar-pradesh-1718565680

NO COMMENTS

Exit mobile version