Home சினிமா லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்

0

நயன்தாரா 

தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

அப்படி எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பின் மூலம் முன்னேறி இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக இந்திய சினிமா கொண்டாடும் நாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.

10 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலே அதிசயம் என பார்க்கப்படும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.

கண்ணீர் விட்டு கதறி வெளியேறிய ரியா.. பிக் பாஸ் எலிமினேஷனுக்கு பின் நடந்த சம்பவம்

2005ல் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் கலக்க பேமஸ் ஆனார். அதன்பின் நயன்தாரா பயணம் சாதாரணமானது இல்லை, நிறைய போராட்டம், கஷ்டம் என அனுபவித்தவர் தனது விடாமுயற்சியால் இப்போது வளர்ந்து நிற்கிறார்.

சொத்து மதிப்பு

நானும் ரவுடித்தான் படத்தின் போது விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களக்கு உயிர், உலக் என 2 மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்பும் செம பிஸியான நடிகையாக வலம் வருபவர் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.

பிஸியான டாப் நாயகியாக இருக்கும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ. 200 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கிவரும் இவர் ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவருடன் இணைந்து நடத்தி அதன்மூலமும் சம்பாதிக்கிறார்.

9ஸ்கின் என்ற அழகு சாதன பொருள், Femi என பல நிறுவனங்களை நிர்வகிக்கும் நயன்தாரா 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடும் செய்து கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வருகிறார்.

பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் ஒரே ஒரு தென்னிந்திய நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகவும் நயன்தாரா உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version