Home சினிமா ரெட்ரோ படத்திற்கு பின் பூஜா கைவசம் உள்ள 3 பிரம்மாண்ட படங்கள்.. என்னென்ன தெரியுமா?

ரெட்ரோ படத்திற்கு பின் பூஜா கைவசம் உள்ள 3 பிரம்மாண்ட படங்கள்.. என்னென்ன தெரியுமா?

0

பூஜா ஹெக்டே 

நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். இவர் ‘டிஜே” படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும், பின்னர் தொடர்ச்சியான தோல்வி படங்களை கொடுத்து பின்னடைவை சந்தித்தார்.

இவர் நடிப்பில் கடந்த மே 1- ம் தேதி வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா நடித்திருந்தார், படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.

இந்தி தெரியாது, குபேரா பட விழாவில் தமிழில் பேசிய தனுஷ்.. இணையத்தை கலக்கும் வீடியோ

இருப்பினும், இந்த ஆண்டு அதிர்ஷ்டம் அவருக்கு சாதகமாக அமைந்ததால், பல பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருக்கிறது.

3 பிரம்மாண்ட படங்கள்

அந்த வகையில், இவர் கைவசம் தற்போது விஜய்யின் ஜனநாயகன், லோகேஷ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் கூலி படத்தில் ஒரு சிறப்பு பாடலிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் காஞ்சனா 4 படத்திலும் நடிக்கிறார். இந்த மூன்று படங்களின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

  

NO COMMENTS

Exit mobile version