ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமான இவர், டம்மி டப்பாசு எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் ஆகிய படங்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார்.
கடந்த ஆண்டு காதலனை கரம்பிடித்து ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தன்னுடைய லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
