சரோஜா தேவி காலமானார்
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி இன்று காலமானார். அவருடைய வயது 87.
உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை திரையுலகில் ஏற்படுத்தியுள்ளது.
71 வயது இளைஞன் நடிகர் சரத்குமாரின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
கன்னட திரையுலகில் அறிமுகமான சரோஜா தேவி, தனது முதல் படத்திற்காகவே தேசி விருதை பெற்றவர். பின் 1958ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
