Home சினிமா இழந்த நபரை நினைத்து எமோஷ்னல் ஆன நடிகை சிம்ரன்.. அவர் போட்ட பதிவு

இழந்த நபரை நினைத்து எமோஷ்னல் ஆன நடிகை சிம்ரன்.. அவர் போட்ட பதிவு

0

நடிகை சிம்ரன்

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் டாப் நாயகியாக, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தவர் நடிகை சிம்ரன்.

ஒருபக்கம் கிளாமர் ரோலில் கலக்கியவர் மறுபக்கம் ஹோம்லி கேரக்டரிலும் கலக்கலாக நடித்திருந்தார். எல்லா ரோலிலும் கலக்க தமிழ் சினிமாவே தலையில் வைத்து கொண்டாடிய நடிகையாக இருந்தார், தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.

பீக்கில் இருந்த போது தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2 மகன்கள் பெற்றவர் அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்தார்.

நடிகையின் பதிவு

கிடைக்கும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் சிம்ரன் கடைசியாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். நடிகை சிம்ரனின் தங்கை மோனலும் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

அவர் பார்வை ஒன்றே போதுமே படத்தில் அறிமுகமானவர் பத்ரி, சமுத்திரம், இஷ்டம், விவரமான ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தார், ஆனால் கடந்த 2002ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையின் 23வது ஆண்டு நினைவு நாளுக்காக ஒரு எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், இந்த 23 வருடங்களில் ஒருநாள்கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்திருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

NO COMMENTS

Exit mobile version