Home சினிமா முதல் முறையாக இப்படியொரு ரோலில் தமன்னா! கையெடுத்து குடும்பிடும் ரசிகர்கள், வீடியோ இதோ

முதல் முறையாக இப்படியொரு ரோலில் தமன்னா! கையெடுத்து குடும்பிடும் ரசிகர்கள், வீடியோ இதோ

0

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இப்படத்தில் தமன்னாவின் நடிப்பு மக்களிடையே பெரிதும் பேசப்படும் என இயக்குனர் சுந்தர்.சி கூறியுள்ளார்.

பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா, தெலுங்கில் ஓடேலா 2 எனும் திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சாமியாராக மாறிய தமன்னா

ஓடேலா 2 படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.

அசோக் தேஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தமன்னா சிவசக்தி எனும் கதாபாத்திரத்தில் சாமியார் வேடத்தில் நடிக்கிறார்.

அதற்கான அறிமுக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். ருத்ராட்ச மாலை, நெற்றியில் பட்டை, கையில் உடுக்கை என ஆளே மாறிவிட்டார் தமன்னா.

இதோ பாருங்க..

Source: https://cineulagam.com/article/actress-tamannaah-acting-as-saint-1714191561

NO COMMENTS

Exit mobile version