Home இலங்கை சமூகம் ஈரான் இஸ்ரேல் பதற்றம் : சிறிலங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

ஈரான் இஸ்ரேல் பதற்றம் : சிறிலங்கன் எயார் லைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

0

ஈரான் இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையை கருத்திற்கொண்டு விமான பாதைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்படி ஐரோப்பாவுக்கான விமான சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விமானத்திற்கு மேலதிக எரிபொருள் தேவைப்படுவதுடன், விமானம் சுமந்து செல்லும் எடையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலண்டன் செல்லும் விமானங்கள்

இதற்கிடையில், இலண்டன் செல்லும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும். இதனால் இலண்டன் செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்தை வந்தடையுமாறு சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு

நேர மாற்றத்தினால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகளுக்கு மாற்று விமானங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக இலங்கை விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version