Home சினிமா தமிழகத்திலேயே முதன்முறை.. விநாயகர் கோயிலுக்கு அன்பு பரிசளித்த நடிகை த்ரிஷா!

தமிழகத்திலேயே முதன்முறை.. விநாயகர் கோயிலுக்கு அன்பு பரிசளித்த நடிகை த்ரிஷா!

0

த்ரிஷா

20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப்.

இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

அந்த படபடப்பு இன்னும் அப்படியே இருக்கு.. மகன் பட விழாவில் விஜய் சேதுபதி ஓபன் டாக்

அன்பு பரிசு  

இந்நிலையில், வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கிலும், கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையில் People For Cattle In India உடன் இணைந்து த்ரிஷா ஒரு பரிசு கொடுத்துள்ளார். 

அதாவது, அருப்புக்கோட்டையில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு நடிகை த்ரிஷா ரூ. 6 லட்சம் மதிப்புள்ள இயந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார். இந்த யானைக்கு கஜா என்று பெயரிடப்படுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version