Home சினிமா நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்- ஓபனாக கூறிய நடிகை வரலட்சுமி

நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்- ஓபனாக கூறிய நடிகை வரலட்சுமி

0

வரலட்சுமி

நடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி.

பிஸியாக நடித்துக்கொண்டு வரும் இவர் அண்மையில் நிக்கோல் என்பவரை குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். எப்போது திருமணம் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் நிக்கோல் ஏற்கெனவே திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்றும் பணத்திற்காக தான் வரலட்சுமி நிக்கோலை திருமணம் செய்கிறார் என்று நிறைய பேச்சுகள் இடம்பெற்றன.

நடிகையின் பேச்சு

இதுகுறித்து வரலட்சுமி ஒரு பேட்டியில் பேசும்போது, நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேன், என்னுடைய வருமானத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிகோலை பணத்திற்காக திருமணம் செய்கிறேன் என சிலர் கூறுகிறார்.

அதே பணம் என்னிடமும் உள்ளது, நான் எதற்காக பணத்திற்காக இன்னொருவரை திருமணம் செய்ய வேண்டும். நிக்கோல் எனக்கு அறிமுகம் ஆனபோது மனைவியுடன் தான் வாழ்ந்து வந்தார்.

எங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நல்ல நட்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அவருடைய பரிவு மற்றும் பாசம், என்னுடைய புரொபஷன் மீது அவருக்கு இருக்கும் அக்கறை எல்லாவற்றையும் பார்த்து தான் எனக்கு காதல் வந்தது.

அப்போது கூட அவர் என்னுடைய அப்பா அம்மாவை நேரில் சந்தித்து என் மீது அவருக்கு இருக்கும் காதலை சொல்லி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version