Home சினிமா விஜய்யின் சச்சின் பட ரீ-ரிலீஸ்.. நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ வைரல்

விஜய்யின் சச்சின் பட ரீ-ரிலீஸ்.. நடிகை ஜெனிலியாவின் நெகிழ்ச்சி வீடியோ வைரல்

0

சச்சின்

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று சச்சின். கடந்த 2005ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் இப்படம் வெளியாகி இருந்தது.

மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் காதல் படங்களில் இந்த படம் முக்கிய பங்கு வகிக்கும். விஜய் மற்றும் ஜெனிலியா இடையே இருக்கும் மிக அழகான கெமிஸ்ட்ரி இந்த படத்தின் மூலம் காணப்படும். இதனால் இந்த ஜோடி ரசிகர்களால் இன்று வரை ரசிக்கப்பட்டு வருகிறது.

GBU பட வெற்றி, நடிகை பிரியா வாரியருக்கு வாழ்த்து கூறிய விஜய்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்

நெகிழ்ச்சி வீடியோ

இந்நிலையில், ரசிகர்களின் ஸ்பெஷல் படமாக அமைந்துள்ள சச்சின் திரைப்படம் சில தினங்களுக்கு முன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

முதல் நாள் இப்படம் திரையரங்கில் வெளியானபோது கிடைத்த வரவேற்பு தற்போது ரீ-ரிலீஸ் ஆன பின்பும் கிடைத்து வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சச்சின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து இப்படத்தில் ஷாலினி கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியா தளபதி ரசிகர்கள் அனைவருக்கும் அவருடைய நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.          

NO COMMENTS

Exit mobile version