Home இலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..

வரலாறு காணாத விலை உயர்வை பதிவு செய்த தங்கத்தின் விலை..

0

சந்தை தரவுகளின் அடிப்படையில் நாட்டில் தங்கத்தின் விலை 20 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. 

இதன்படி,  இன்றையதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

வரலாற்று உச்ச விலை

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 337,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, நேற்று முன்தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 345,000 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில்,  இன்றையதினம் 20 ஆயிரம் ரூபாவால் அதிகரித்து 3 இலட்சத்து 65 ஆயிரத்தை அடைந்துள்ளது. 

மேலும், கடந்த  இரு வாரங்களாக தங்கத்தின் விலை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் 4 இலட்சம் ரூபா என்ற வரலாற்று உச்ச  விலையை எட்டலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

Source: https://tamilwin.com/article/gold-price-high-in-sri-lanka-1760419851

NO COMMENTS

Exit mobile version