Home இலங்கை சமூகம் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்தி வைப்பு

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கு ஒத்தி வைப்பு

0

Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) – மூதூர் கிழக்கு, சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விவகார வழக்கானது எதிர்வரும் ஜூலை 04 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை பிரதேசத்தில் மலை உடைப்பதால் தமக்கு பாதிப்புள்ளதாக கல்மலை உடைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்த 10 பொதுமக்கள் கடந்த ஜுன் 11ஆம் திகதி அன்று சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 12 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

வழக்கு விசாரணை

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் கடந்த 15ஆம் திகதி அன்று விஜயம் செய்து பார்வையிட்டதுடன் குறித்த வழக்கானது நேற்று (20.06.2024) மூதூர் நீதிமன்றில் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை மூதூர் நீதிமன்றில் சம்பூர் பொலிஸார் முன்னர் தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில், குறித்த வழக்கில் இரு தரப்பினரும் நேற்று (20) முன்னிலையாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு சொந்த பிணையில் விடுவிக்கப்பட்ட 10 நபர்களுக்கும் சார்பாக சட்டத்தரணிகளான பு.முகுந்தன்,நா.மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் தங்கமுத்து ஜயசிங்கம் ஆகியவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

இதன்போது, குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மூதூர் நீதிமன்ற பதில் நீதவானால் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version