Home இலங்கை சமூகம் உயர்தர பரீட்சைக்கு தயாரான மாணவி மர்மான முறையில் மரணம்

உயர்தர பரீட்சைக்கு தயாரான மாணவி மர்மான முறையில் மரணம்

0

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவுக்கு எழுதவிருந்த தம்புள்ளையைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தம்புள்ள தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு படித்துவிட்டு உறங்கிய மாணவி காலையில் எழுந்திருக்காத நிலையில், பெற்றோர்கள் அவரைச் சோதித்தபோது மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டனர்.


மாணவி மர்மான முறையில் மரணம்

உடனடியாக மாணவியை தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் அதற்குள் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் திடீர் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version