Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பிற்கான ஆவண விநியோகம் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பிற்கான ஆவண விநியோகம் முன்னெடுப்பு

0

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்கான ஆவணங்கள் பொதியிடப்பட்டு விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.  

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு
449 686 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 13448
விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்

இதில் 332 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் தபால்மூலம்
வாக்களிப்பதற்கு 13116 விண்ணப்பதாரிகள் தகுதி பெற்றுள்ளதாக ஜஸ்டினா முரளிதரன் கூறியுள்ளார்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கு நடைமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கல் மற்றும் இன்று இடம்பெற்ற செயலமர்வு ஆகியன தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version