Home இலங்கை சமூகம் அழகுசாதன பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

அழகுசாதன பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

0

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி உரிய தரத்திலான அழகு சாதனப் பொருட்களை மாத்திரம் பயண்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அழகுசாதனப் பொருட்களை விற்கும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தோல் சேதமடையும் அபாயம்

இந்த அழகுசாதனப் பொருட்களில் பெரும்பாலானவை தரமற்றதாகவும் பெரும்பாலும் தோலுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான தரமற்ற அழகுசாதனப் பொருட்களினால் தோல் சேதமடையக் கூடும் என நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version