Home இலங்கை சமூகம் உப்பு தட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உப்பு தட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. 

மேலும், உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்யும் அளவுக்கு உப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்படக்கூடிய உப்புத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

சுமார் 15 வருடங்களின் பின்னர் இலங்கையில் பொது பாவனைக்காக உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உப்பு தேவை

இந்நாட்டு மக்களின் உப்புத் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னார், அலிமங்கட மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள உப்பளங்களில் இருந்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன்படி, நாட்டின் வருடாந்த உப்புத் தேவை 180,000 மெற்றிக் தொன்களாகும்.

இதில் 50வீத பொதுத்துறை நிறுவனமும், 50வீத தனியார் துறையும் உற்பத்தி செய்கின்றன.

ஆனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 200,000 மெற்றிக் தொன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் உப்பு உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது.

70வீத உப்பு உற்பத்தி செய்யப்படும் ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான அதிக பருவத்தில் மழையுடன் கூடிய மோசமான வானிலையே இதற்கு முக்கிய காரணம்.

இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, எதிர்பார்த்த உப்பு உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தீர்வாக 30,000 மெற்றிக் தொன் அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version