Home தொழில்நுட்பம் நாடாளுமன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு

நாடாளுமன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரீட்சிப்பு

0

அரசாங்க நிதி பற்றியக் குழு, நாடாளுமன்ற பதிவுப்புத்தகம்(ஹன்சார்டைத்)
தயாரிப்பதற்காக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக
பரிசோதித்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா
எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூகுள் நிறுனத்தின் உள்ளூர் பங்காளரான பைனெடெக்ஹெச்கியூவால்
ஒருங்கிணைக்கப்பட்ட AI அமைப்பு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள
பாரம்பரிய, கையால் எழுதப்பட்ட ஹன்சார்ட் அமைப்பை மாற்றுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக பணிச்சுமைக்கு மத்தியில் உரை பெயர்ப்பாளர்களை கொண்ட பத்துக்கும் மேற்பட்ட
குழுக்கள் உரைகளை எழுத்து வடிவமாக்க பல நாட்கள் தாமதத்தை எதிர்கொண்டு வந்தனர்.

வெளிப்படைத்தன்மை 

தற்போது AI தொழில்நுட்பம் மூலம் உரைகளை சில நிமிடங்களில் எழுத்து வடிவத்துக்கு
கொண்டுவரமுடியும். இது செயல்திறனைப் புரட்சிகசிகரமாக்குகிறது என ஹர்ஷ டி
சில்வா கூறியுள்ளார்.

இந்த முயற்சி ஆவணக் களஞ்சியத்தைக் கணிசமாகக் குறைத்து, நாடாளுமன்றப் பணிகளில்
வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version