பேருந்து சாரதிகளை கண்காணிக்கும் வகையிலான செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் அடங்கிய GPS மற்றும் CCTV அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வீதி விபத்துகளைத் தடுக்க நீண்ட தூர பேருந்துகளில் இந்த அமைப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
AI அமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகள் இரண்டிலும் AI அமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பேருந்து சாரதியின் செயல்பாடுகள், அவர் சோர்வாக இருக்கிறாரா, தூக்கத்தில் இருக்கிறாரா, அல்லது வாகனம் ஓட்டும்போது தொலைபேசி அழைப்புகளைச் செய்கிறாரா என்பதைக் கண்காணிக்கவும் இந்த அமைப்பு உதவும்.
AI தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி CCTV மற்றும் GPS அமைப்புகள் SLTB மற்றும் தனியார் நீண்ட தூர பேருந்துகளில் நிறுவப்படும் என்றும், அவை வழித்தட அனுமதியுடன் வழங்கப்படும்.
