Home இந்தியா வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

வெடித்து சிதறிய ஏர் இந்தியா விமானம் : பரிதாபமாக பறிபோன 242 உயிர்கள்

0

புதிய இணைப்பு 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக கள அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள் காட்டி இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.17 மதியளவில் லண்டன் புறப்பட்ட ஏயார் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 12 வயதிற்கு உட்பட்ட 14 குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

விமான விபத்தை அடுத்து அகமதாபாத்தில் (Ahmedabad) விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு (London) இன்று பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட எயார் இந்தியா (India) விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது.

குறித்த விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்துள்ளதாக தெரவிக்கப்பட்டது.

விமான விபத்து குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

விமான சேவைகள் 

மேலும், விமான விபத்து விழுந்து நொருங்கிய இடத்தில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அகமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லவிருந்த மூன்று விமானங்களின் சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/TJKTnTqMu_s

Source: https://ibctamil.com/article/air-india-ahmedabad-plane-crash-1749727754

NO COMMENTS

Exit mobile version