Home உலகம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எயார் இந்தியா விமானம்: அடுத்து நடந்தது என்ன…

ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட எயார் இந்தியா விமானம்: அடுத்து நடந்தது என்ன…

0

டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற எயார் இந்தியா (Air India) விமானமொன்று ரஷ்யாவில் (Russia) அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவில் (Russia) உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (19) இவ்வாறு குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட, எயார் இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் 243 பயணிகள் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

தீ எச்சரிக்கை

இந்த விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்ட 6 மணி நேர பயணத்திற்கு பிறகு தீ எச்சரிக்கை ஒலியெழுப்பப்பட்டதை தொடர்ந்து ரஷ்யாவில் தரையிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த விமானத்தில் தீ அல்லது புகை ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று மத்திய விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், விமானப் பயணிகளுக்கு உதவுவதற்காக, அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்பாளர்கள் கொண்ட தூதரக குழு, க்ராஸ்னோயர்ஸ்க்-கிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version