Home உலகம் ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை – ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு

ஆட்டம் காண்கிறதா இந்திய விமான சேவை – ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு

0

அகமதாபாத் ஏர் இந்தியா (Air india) விமான விபத்து அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்கு அந்நிறுவனத்துக்கு கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

கடந்த 12 ஆம் திகதி அகமதாபாத் (Ahmedabad) அருகே ஏர் இந்தியா விமான விபத்தில் பயணித்தவர்கள் உட்பட 270 பேர் பலியாகினர்.

இந்த விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விமானத்தில் பயணிப்பவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உள்ளனர்.

ஏர் இந்தியாவின் முதல் சேவை

நேற்று லண்டனில் (London) இருந்து சென்னைக்கு (Chennai) வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த Al 159 ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தின் பின்னர் லண்டனுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் முதல் சேவையாக இது இருந்தது. விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு மதியம் 1:10 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த 200 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.youtube.com/embed/Q0rR-57hqSE

NO COMMENTS

Exit mobile version