Home இலங்கை சமூகம் நாட்டில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

நாட்டில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்

0

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் தரக் குறியீடு 

அத்துடன் இன்றைய தினம் காற்றின் தரக் குறியீடு 52 முதல் 112இற்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version