Home சினிமா அஜித் இப்படியொரு படத்தில் நடிக்கவிருந்தாரா.. கைவிடப்பட்ட படத்தின் First லுக் போஸ்டர்

அஜித் இப்படியொரு படத்தில் நடிக்கவிருந்தாரா.. கைவிடப்பட்ட படத்தின் First லுக் போஸ்டர்

0

கைவிடப்பட்ட  அஜித் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். இப்படத்தை சரவண சுபையா இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றியடைந்த இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருந்த திரைப்படம் தான் இதிகாசம். இப்படத்தையும் சரவண சுபையா தான் இயக்கவிருந்துள்ளார். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இண்டியானா ஜான்ஸ் படம் போல் இப்படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கான First லுக் போஸ்டர் கூட வெளிவந்துள்ள நிலையில், இப்படம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

கைவசமுள்ள திரைப்படங்கள்

உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். விடாமுயற்சி இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ள நிலையில், குட் பேட் அக்லி படப்பிடிப்பு முதற்கட்டதை முடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/ajith-shelved-movie-first-look-poster-1718600991

NO COMMENTS

Exit mobile version