அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் விடாமுயற்சி.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது அஜித் தனது கார் ரேஸிங் கனவை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார்.
பாலிவுட்டுக்கு படையெடுத்த தமிழ் இயக்குநர்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ
மார்ச், ஏப்ரல் வரை கார் ரேஸிங்கில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளாராம். தன் தந்தையை போல மகன் ஆத்விக்கும் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
மகன் செய்த சாதனை
குறிப்பாக கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கும் ஆத்விக் சென்னையின் எஃப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கிறார். இந்நிலையில், ஆத்விக் அவர் பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு அதில் முதலிடம் பிடித்திருக்கிறார்.
அதுவும் ஒரு போட்டியில் மட்டுமில்லை மொத்தம் 3 ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்ட ஆத்விக் மூன்றிலும் முதலிடம் பிடித்து 3 தங்க மெடல்களை வாங்கி உள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
