Home இலங்கை கல்வி உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீடு பெறுபேறுகள் வெளியாகின!

உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீடு பெறுபேறுகள் வெளியாகின!

0

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் மறுமதிப்பீடு பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk க்கு சென்று பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெறலாம்.

விண்ணப்ப காலம்

மேலும், இந்த மறுமதிப்பீடு பெறுபேறுகளின் அடிப்படையில் மீள 2025 G.C.E. (A.L.) பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் 2025 G.C.E. (A.L.) பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்கான மீள் விண்ணப்ப காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , இன்று(07) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நிகழ்நிலையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version