Home இலங்கை சமூகம் கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

கணித பிரிவில் கல்வி கற்றுவந்த உயர்தர மாணவனின் விபரீத முடிவு

0

கம்பளையில் 18 வயதான உயர்தர மாணவரொருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இவர் க.பொ.த சாதாரண தரத்தில் 8 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியை பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி பயின்று வந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்ற பின் சகோதரன், இளைஞரின் அறைக்கு வந்து பார்த்த போது அவர் சுடப்பட்ட நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக சகோதரன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

விசாரணைகளில் வெளியான தகவல்

இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழி பாடங்களைச் செய்துள்ளதோடு, கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே அவர் இணையவழி விளையாட்டிற்கு அடிமையாகி, தேர்வை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளைஞர் இறந்த இடத்திலிருந்து கத்தியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தனது தந்தைக்கு சொந்தமான துப்பாக்கியையே அவர் பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version