Home இலங்கை இலவச விசா திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள வட ஆபிரிக்க நாடு!

இலவச விசா திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள வட ஆபிரிக்க நாடு!

0

சுற்றுலாவை மேம்படுத்த இலவச புதிய விசா திட்டமொன்றை அல்ஜீரியா (Algeria) அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தவகையில், இலங்கை (Sri Lanka), மலேசியா (Malaysia), மாலைதீவு (Maldives) உள்ளிட்ட 55 நாடுகளுக்கு குறித்த இலவச விசா பயணத்தை அல்ஜீரியா வழங்கியுள்ளது.

புதிய விசா

புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க எழுச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அல்ஜீரியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த இந்தப் புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அல்ஜீரியா தெரிவித்துள்ளது.

 

Source: https://ibctamil.com/article/algeria-s-new-visa-policy-for-55-countries-1722099834

NO COMMENTS

Exit mobile version