Courtesy: Sivaa Mayuri
புதிய இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு இதுவரை மூன்று தவணைகளாக 1 பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன.
குறித்த நிதியத்தின் நிர்வாக சபையின் இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வின்போது அனுமதிக்கப்பட்ட 336 மில்லியன் டொலர்களையும் சேர்த்தே இந்த ஒரு பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
முன்னதாக முழுமையாக 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது
புரிந்துணர்வு ஒப்பந்தம்
எனினும் இந்த தொகை சர்வதேச நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியம் நேற்றைய சந்திப்பின் பின்னர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றத்தை சபையின் பணிப்பாளர்கள் வரவேற்றதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக முடிக்கவும் மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் இறுதி ஒப்பந்தங்களை முடிக்கவும் நாணய நிதியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் வெளிப்புற தனியார் கடனாளிகளுடன், வெளிப்படையான மற்றும் சரியான நேரத்தில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் பணிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை, இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் 2ஆவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது, இலங்கைக்கு 3 வது தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற வழி வகுத்துள்ளது.
எதிர்கால நலன்
இந்தநிலையில், இது, எதிர்கால நலனுக்காக, இலங்கையின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த வெற்றி என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
IMF’s approved the 2nd review of Sri Lanka’s program. This achievement is a testament to our dedication to driving forward economic reforms and securing a prosperous future for all Sri Lankans.
Onward and upward! ???????? #Progress #SriLanka #IMF— M U M Ali Sabry (@alisabrypc) June 12, 2024